/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநாடு தேதி அறிவிப்பு: நிர்வாகிகள் கொண்டாட்டம்
/
த.வெ.க., மாநாடு தேதி அறிவிப்பு: நிர்வாகிகள் கொண்டாட்டம்
த.வெ.க., மாநாடு தேதி அறிவிப்பு: நிர்வாகிகள் கொண்டாட்டம்
த.வெ.க., மாநாடு தேதி அறிவிப்பு: நிர்வாகிகள் கொண்டாட்டம்
ADDED : செப் 20, 2024 09:51 PM

விழுப்புரம் : த.வெ.க., முதல் மாநில மாநாட்டிற்கான தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, விழுப்புரத்தில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
த.வெ.க., முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறும் என மாநிலத் தலைவர் விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையொட்டி, மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி தலைமையில் தலைவர் மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் மற்றும் இளைஞரணி, மகளிரணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.