/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'நான் முதல்வன்' திட்டம் திறன் குழு கலந்தாய்வு
/
'நான் முதல்வன்' திட்டம் திறன் குழு கலந்தாய்வு
ADDED : ஆக 07, 2025 11:27 PM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் மாவட்ட திறன்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் படித்து வரும் மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் திறன் பயிற்சிகள் குறித்தும், திறன் பயிற்சிகள் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்று தற்பொழுது பணிபுரிந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறியப்பட்டது.
மேலும், மாணவர்களுக்கு புதிய தொழிற்பயிற்சிகள் வழங்குவது, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து துறை அலுவலர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (திறன் பயிற்சிகள்) சிவசுப்ரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

