sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தங்கை சாவிற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டேன் : சகோதரர் மனு

/

 தங்கை சாவிற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டேன் : சகோதரர் மனு

 தங்கை சாவிற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டேன் : சகோதரர் மனு

 தங்கை சாவிற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டேன் : சகோதரர் மனு


ADDED : பிப் 03, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 03, 2026 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தங்கையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி சகோதரர், உறவினர்களோடு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே அழகப்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்,26; இவர், நேற்று தனது தங்கை தேவஜெசிபிரியா இறப்பிற்கு நியாயம் கேட்டு உறவினர்களோடு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து, கோரிக்கையை மனுவாக அளித்து விட்டு செல்லும்படி தெரிவித்தனர். பின், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

என் தங்கை தேவஜெசிபிரியா,22; விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அருகே சொர்ணாவூரை சேர்ந்த முருகன் மகன் வசந்தகுமார் என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். வசந்தகுமாரின் பெற்றோர் மற்றும் சகோதரர், வரதட்சணை கேட்டும், ஜாதி பெயரை கூறியும் தேவஜெசிபிரியாவை திட்டி உள்ளனர். இதுபற்றி கடந்த 30ம் தேதி தேவஜெசிபிரியா 100 எண்ணிற்கு போன் செய்து போலீசாருக்கும் தெரிவித்துள்ளார்.

அதனால் வசந்தகுமார் குடும்பத்தினர், என் தங்கையை தாக்கியுள்ளனர். பின் சிறிது நேரத்தில் தேவஜெசிபிரியா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். திட்டமிட்டு கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனர். வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றும் வரதட்சணை கொடுமை, கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். அதுவரை எனது தங்கையின் உடலை வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us