/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு
/
கோட்டக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு
கோட்டக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு
கோட்டக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 07, 2024 08:11 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெஞ்சல் புயலில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக ஜமியத் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் வீடுகளில் மழை வெள்ளநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கோட்டக்குப்பம் நகர பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வானுார் அடுத்த புள்ளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில், புயலால் பாதித்த மக்களுக்கு வழங்கப்பட உள்ள நிவாரண பொருட்களை ஆய்வு செய்தார்.
இதே போன்று, அரசின் முதன்மைச் செயலர் அமுதா, கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன், வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, நகராட்சி கமிஷனர் புகேந்திரி, நெடுஞ்சாலை துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.