/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தியேட்டர்களில் நுழைவு கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் கலெக்டர் பழனி எச்சரிக்கை

ADDED : மார் 12, 2024 05:20 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளிலும், அரசு நிர்ணயிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க கோட்ட அளவில் சப் கலெக்டர், ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி., வருவாய் ஆய்வாளர் (நகராட்சி), செயல் அலுவலர்கள் (பேரூராட்சிகள்), பி.டி.ஓ.,க்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் புகார் தெரிவிக்கலாம்.
இந்த தொலைபேசியில் பெறப்படும் புகார்கள் மீது கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு விசாரணை செய்து திரையரங்க உரிமையாளர்கள் மீது நடைமுறையில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.