/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'நேர்மையாக செயல்படுங்கள்' போலீசுக்கு ஐ.ஜி., 'அட்வைஸ்'
/
'நேர்மையாக செயல்படுங்கள்' போலீசுக்கு ஐ.ஜி., 'அட்வைஸ்'
'நேர்மையாக செயல்படுங்கள்' போலீசுக்கு ஐ.ஜி., 'அட்வைஸ்'
'நேர்மையாக செயல்படுங்கள்' போலீசுக்கு ஐ.ஜி., 'அட்வைஸ்'
ADDED : ஆக 21, 2024 05:25 AM

விழுப்புரம், : 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்' என ஐ.ஜி., அஸ்ராகார்க் அறிவுரை வழங்கினார்.
விழுப்புரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., திஷாமித்தல், எஸ்.பி., தீபக்சிவாச் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி.,க் கள் திருமால், தினகரன், ஸ்ரீதர், டி.எஸ்.பி.,க் கள், இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நிலவரம், கள்ளச்சாராயம், போதைப் பொருள் கடத்தல் வழக்குகள், அதனை தடுப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், நிலுவை வழக்குகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாராய வியாபாரிகள் உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களிடம் எவ்வித தொடர்பும் இல்லாமல், புகார்களுக்கு இடமளிக்காமல் நேர்மையாக செயல்பட வேண்டும்.
தனிப்பிரிவு போலீசார், தங்கள் பகுதி ஸ்டேஷன்களில் நடக்கும் விஷயங்களை ஒளிவுமறைவின்றி, அவ்வப்போது எஸ்.பி.,யிடம் தெரிவிக்க அறிவுருத்தினார்.