/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் ஏ.பி.டி., செயலி அமல்
/
ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் ஏ.பி.டி., செயலி அமல்
ADDED : ஜூலை 19, 2025 02:36 AM
விழுப்புரம் : விழுப்புரம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில், இன்று முதல் வரும், 22ம் தேதி வரை பொது பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அலுவலக செய்திக்குறிப்பு;
இந்திய அஞ்சல் துறையின், அடுத்த தலைமுறை ஏ.பி.டி., செயலி, விழுப்புரம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் வரும் 22ம் தேதி அமலுக்கு வருகிறது.
இதற்காக திட்டமிடப்பட்ட செயலிழப்பு நேரமான இன்று 19ம் தேதி மதியம் 2:00 மணி முதல் வரும், 22ம் தேதி காலை 6:00 மணி வரை, விழுப்புரம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் அமலுக்கு வருகிறது.
இந்த தேதிகளில் எந்த பொது பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது. தரவு இடம்பெயர்வு, அமைப்பு சரிபார்ப்புகள் மற்றும் உள்ளமைப்பு செயல்முறைகளை எளிதாக்குவதற்கு இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் அவசியம்.
மேம்பட்ட பயனாளர் அனுபவத்தை வழங்க ஏ.பி.டி., பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த இடையூறை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.