/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆன் லைன் கட்டண வசதி அமல்
/
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆன் லைன் கட்டண வசதி அமல்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆன் லைன் கட்டண வசதி அமல்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆன் லைன் கட்டண வசதி அமல்
ADDED : டிச 30, 2024 06:25 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை நேற்று முதல் ஆன்லைனில் செலுத்தும் வசதி அமல் செய்தது.
பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து உடல் நிலை நிலவரத்தை தெரிந்து சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.
அரசு மருத்துவ மனையில் சி.டி., ஸ்கேன் எடுக்க கட்டணமாக ஒரு பகுதிக்கு 500 ரூபாயும், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க 2,500 ரூபாயும் ரொக்கம் வசூலிக்கப்படுகிறது.
இதில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எடுக்க முன்கூட்டியே பதிவுசெய்து அப்ரூவல் கிடைத்த பின்னர் இலவசமாக பரிசோதனை எடுத்து செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல் லுாரி, மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்காக கட்டணஙகள் செலுத்தும் மையங்களில் தனி க்யூஆர்கோடு ஸ்கேனர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.ஏ.டி.எம்., கார்டு மூலம் செலுத்த ஸ்வைப்பிங் மிஷன் வதியும் உள்ளது.
நேற்று முதல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் ஆன்லைன் கட்டணவசதி அமல் செய்யப்பட்டது.
இனி பரிசோதனை எடுக்க செல்பவர்கள் எளிதாக கட்டணத்தை ஆன்லைனில் சிரமமின்றி செலுத்தி, பில் பெற்று பரிசோதனை செய்து கொள்ளமுடியும்.