/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை கிழக்கு ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா
/
காணை கிழக்கு ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா
காணை கிழக்கு ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா
காணை கிழக்கு ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : ஜூன் 26, 2025 02:15 AM

விழுப்புரம்: காணை கிழக்கு ஒன்றியம், வெண்மணியாத்துார் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
காணை கிழக்கு ஒன்றியம், வெண்மணியாத்துார் ஊராட்சி லட்சுமிபுரம் கிராமத்தில் விழுப்புரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8.05 லட்சம் மதிப்பில் பகுதி நேர ரேஷன் கடை கட்டடம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியின் கீழ், ரூ.10.05 லட்சம் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம், வெண்மணியாத்துார் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7.15 லட்சம் மதிப்பில் புதிய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.
புதிய கட்டடங்களை எம்.எல்.ஏ., லட்சுமணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். காணை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவநேசன், ஜூலியானா, தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் தேவபூஷ்ணம் முருகன், ஜெயா குமரன், ஊராட்சி தலைவர் சிவசங்கர், கலைவாணி ரமணன், விமலா அறிவழகன், துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வம், கிளை செயலாளர் ராஜேந்திரன், முருகதாஸ், காளிதாஸ், ஜெயக்கொடி, ராஜேந்திரன், தேவன், மணிகண்டன், ஒன்றிய மகளிர் தொண்டரணி மஞ்சு, வர்த்தக அணி அமைப்பாளர் அறிவழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் குமார் கார்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மண்ணாங்கட்டி, நிர்வாகிகள் முருகன், அமுதா, வீரமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.