/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கிடங்கல் பகுதியில் நவீன கழிப்பிடம் திறப்பு விழா
/
திண்டிவனம் கிடங்கல் பகுதியில் நவீன கழிப்பிடம் திறப்பு விழா
திண்டிவனம் கிடங்கல் பகுதியில் நவீன கழிப்பிடம் திறப்பு விழா
திண்டிவனம் கிடங்கல் பகுதியில் நவீன கழிப்பிடம் திறப்பு விழா
ADDED : செப் 18, 2024 11:19 PM

திண்டிவனம்,: திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பிட கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
திண்டிவனம் கிடங்கல்(2) பகுதியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் நவீன பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழாவிற்கு நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல் தலைமை தாங்கினார்.விழுப்புரம் எம்.பி.,ரவிக்குமார் முன்னிலையில், அமைச்சர் மஸ்தான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.