/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெயபுரத்தில் குழந்தைகள் மையம் திறப்பு விழா
/
ஜெயபுரத்தில் குழந்தைகள் மையம் திறப்பு விழா
ADDED : பிப் 01, 2024 05:27 AM

திண்டிவனம்: திண்டிவனம் ஜெயபுரத்தில் ரூ.14 லட்சம் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
திண்டிவனம் ஜெயபுரம் 25 வது வார்டில், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் குழந்தைகள் மையம் கட்டபட்டுள்ளது.
அமைச்சர் மஸ்தான் மையத்தை நேற்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ரவிக்குமார் எம்.பி., தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு, 25வது வார்டு கவுன்சிலர் ரேகாநந்தகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், உதவி பொறியாளர் வெங்கடாசலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ரமணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரசேன், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, நகர துணை செயலாளர் கவுதமன், வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.