ADDED : அக் 27, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: பரதன்தாங்கல் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 14.31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் உமா சங்கர் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயராகவன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.