/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
/
ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : மார் 14, 2024 11:28 PM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றியத்தில் 1.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
அவலுார்பேட்டையில் அங்கன்வாடி மையம், ரவணாம்பட்டில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கெங்கபுரத்தில் காளான் உற்பத்தி மையம், நொச்சலுாரில் ரேஷன் கடை கட்டடம் என ஒன்றியத்தில் 1.54 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.
இந்த கட்டடங்களை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து பேசினார். விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வம் வரவேற்றார். துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.