/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் ராம்டெக்ஸ் துணிக் கடை திறப்பு விழா
/
திண்டிவனத்தில் ராம்டெக்ஸ் துணிக் கடை திறப்பு விழா
ADDED : அக் 14, 2024 08:15 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் புதுப்பொலிவுடன் ராம்டெக்ஸ் துணிக்கடை திறப்பு விழா நடந்தது.
திண்டிவனம் நேரு வீதியில் பழைய கோர்ட் வளாகத்திற்கு எதிரில் ராம்டெக்ஸ் துணிக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையை புதுப்பித்து குளிர் சாதன வசதியுடன் கூடிய கட்டடம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
விழாவில் கடை உரிமையாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி வரவேற்றார். விற்பனையை தியாகராஜன், ரகுநந்தன், தினகரன் துவக்கி வைத்தனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்.
தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், முன்னாள் செயலாளர் கபிலன், பாத்திரக்கடை உரிமையாளர் சங்க பால்பாண்டியன் ரமேஷ், தொழில் அதிபர்கள் சுப்ராயலு, சுரேஷ், நகைக் கடை உரிமையாளர் சங்கம் ராம்லால் ரமேஷ், கவுன்சிலர்கள் சின்னசாமி, பாபு, சரவணன், கார்த்திக், பரணிதரன், தில்ஷாத்பேகம், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.