/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் கண்டக்டர்கள் 12 பேருக்கு ஊக்கப் பரிசு
/
அரசு பஸ் கண்டக்டர்கள் 12 பேருக்கு ஊக்கப் பரிசு
ADDED : ஆக 09, 2025 07:16 AM
விழுப்புரம் : அரசு பஸ்களில், அதிகளவில் மின்னணு பயணச்சீட்டு கட்டணம் வசூலித்த கண்டக்டர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், விழுப்புரம் கோட்ட பஸ்களில், மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் பயணிகளிடமிருந்து பயணச்சீட்டு கட்டண வசூலுக்காக அதிக பணமில்லா பரிவர்த்தனை செய்த சிறந்த கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டல அளவில் தலா 12 கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்படி, விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில், 12 சிறந்த பஸ் கண்டக்டர்களுக்கு, மேலாண் இயக்குநர் குணசேகரன் ஊக்கப் பரிசு வழங்கினார்.