/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு சாகுபடியில் வருவாய் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை தகவல்
/
கரும்பு சாகுபடியில் வருவாய் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை தகவல்
கரும்பு சாகுபடியில் வருவாய் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை தகவல்
கரும்பு சாகுபடியில் வருவாய் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை தகவல்
ADDED : அக் 10, 2024 04:12 AM
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கடந்த 23 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு அதிக மகசூல் லாபம் பெறுவதற்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
சர்க்கரை ஆலையின் பகுதிக்கேற்ற கரும்புரகங்களை கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம் பெற்று ஆலையின் கரும்பு ஆராய்ச்சி பண்ணை , விவசாயிகளின் வயல்களில் பரிசோதனை செய்கிறது. பின், சரியான ரகத்தையும், வீரியமிக்க நாற்றாங்கால் விதைக்கரும்பை பெற்று ஆலைப் பகுதியில் பயிரிட விவசாயிகளுக்கு தரமான விதைக் கரும்பைபரிந்துரைக்கிறது.
கரும்பு மகசூலை அதிகரிக்க ஹியூமிக் அமிலம், பயிர் வளர்ச்சி குருணை (சமர்த்தா) நுண்ணுாட்ட சத்து கலவையும், கரும்பில் இடைக்கணுப்புழு தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்க டிரைக்கோகிராம்மா ஒட்டுண்ணி, டெட்ராஸ்டிரைக்கஸ் குளவிகள் மற்றும் இனக்கவர்ச்சிப் பொறி ஆகியவற்றை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது.
மேலும் கரும்பில் குருத்துப்பூச்சி மற்றும் இடைக்கணுப்புழு தாக்குதலைக் குறைக்க குளோரன் டிரனிலிப்ரோல் மருந்தும் கரும்பை வறட்சியிலிருந்து பாதுகாக்க ஜெல் குருணையை பரிசோதனைக்குப் பிறகு விவசாயிகளுக்கு ஆலை மூலம் வழங்கி வருகிறது. இதனால் பூச்சி தாக்குதல் குறைவதோடு மகசூல் அதிகரிக்கிறது.
மேலும் கரும்பு நடவிலிருந்து அறுவடை வரைவளரும் களைகளைக் கட்டுப்படுத்த களைக் கொல்லிகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது.
வரும் காலங்களில் கரும்பு வெட்டும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து குறைந்த செலவில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்ய 2 ஏக்கருக்கு மேல் நடவு செய்யும் விவசாயிகள் பெரிய வயலாக இருந்தால் இயந்திர அறுவடைக்கு ஏற்றவாறுபார் அமைத்து நடவு செய்யவும் கரும்பு அலுவலர்கள் உதவி செய்து வருகின்றனர்.வயலில் கரும்பு தோகையை எரிக்காமல் இயந்திரம் மூலம் துாளாக்கி பரப்புவதால் நீரில் தோகை மக்கிஆவியாவது தடுக்கப்படுவதோடு மகசூலும் அதிகரிக்கிறது.
நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு நிலையான கரும்பு சாகுபடி மூலம் நிறைவான மகசூல் பெற்று விவசாயிகள் பலனடையும் நோக்கத்தில் ராஜ்ஸ்ரீ சரக்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.