/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் விற்பனைக் கூடத்தில் விளை பொருள்கள் வரத்து அதிகரிப்பு
/
வேளாண் விற்பனைக் கூடத்தில் விளை பொருள்கள் வரத்து அதிகரிப்பு
வேளாண் விற்பனைக் கூடத்தில் விளை பொருள்கள் வரத்து அதிகரிப்பு
வேளாண் விற்பனைக் கூடத்தில் விளை பொருள்கள் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 12, 2024 11:20 PM
விழுப்புரம் : வளத்தி மார்க்கெட் கமிட்டியில், இ-நாம் திட்டத்தில் நடைபெறும் ஏலத்தில், விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைப்பதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் செய்திக்குறிப்பு:
வளத்தி மார்க்கெட் கமிட்டிக்கு, சுற்றுப்பகுதி விவசாயிகளால் தினசரி கொண்டு வரப்படும் விளை பொருள்களும், மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தில் (இ-நாம்) முறையில் ஏலம் விட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது இ-நாம் சந்தை திட்டத்தில் வெளி மாவட்ட வியாபாரிகளால், மின்னணு முறையில் பார்வையிட்டு கொள்முதல் செய்யப்பட்டு, விளை பொருள்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்து, விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
இதனால், வளத்தி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், வேர்க்கடலை, பனிப்பயிர், மக்காச்சோளம், கம்பு, ராகி, உளுந்து, தேங்காய், மிளகாய் உள்ளிட்ட பிற விளை பொருட்களையும், அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம்.
குறுகிய நாட்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனே பணம் பட்டுவாடா செய்வதாலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அதிகமாக கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.