
விழுப்புரம்:திருநாவலுார் ஜோசப் கல்லுாரி, கமலா கல்வியியல் கல்லுாரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தாளாளர் கமலா ஜோசப் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகர் ஜெயராஜ், தேசிய கொடியேற்றினார். முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின் ெஷர்லி, துணை முதல்வர் வள்ளல் ராஜா வாழ்த்தி பேசினர். கணினி துறை மாணவ, மாணவிகளின் பிரமிடு நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில், இயக்குனர் ஜோசப் ஜோஷூவா, கமலா கல்வியியல் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் ரவிவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். தாளாளர் சரவணன் தேசியகொடியேற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
நிர்வாக உறுப்பினர் கல்பனா சரவணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பங்கேற்றனர். ஏற்பாடுகளை நித்தின் சரவணன் செய்தார். டீன் பெருமாள் நன்றி கூறினார்.
திண்டிவனம் மரக்காணம் சாணக்யா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் துணைத் தாளாளர் வேல்முருகன் தலைமை தாங்கி, தேசியகொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் நரேன் பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ஜே.சி.ஐ., மண்டலம் 16வது முன்னாள் அலுவலர் மண்டல பயிற்சியாளர் அமலோற்பவம் மேரி விக்டோரியா பேசினார். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.