/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 290 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
/
விழுப்புரத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 290 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
விழுப்புரத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 290 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
விழுப்புரத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 290 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஆக 15, 2025 11:20 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின கொடியேற்று விழா கோலாகலமாக நடந்தது. விழாவில், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 290 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று காலை சுதந்திர தின விழா நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மேலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் வண்ண பலுான்களை பறக்கவிட்டார்.
தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பினை திறந்தவெளி ஜீப்பில் எஸ்.பி.,சரவணனுடன் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் (அரசு உதவி பெறும்) மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் செயின்ட் பிலோமினாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் இமேஜ் நடன பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 290 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர் 5 பேருக்கு அரசு பணிக்கான உத்தரவுகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 15 துாய்மைப் பணியாளர்கள், 3 முன்னோடி விவசாயிகள் மற்றும் அதிகட்ச வரி செலுத்திய 2 நிறுவனங்கள், உயர்கல்விக்கான அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவர்கள் என அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில், டி.ஐ.ஜி.,உமா, எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் ஷீலா தேவி சேரன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார் குப்தா, ஏ.டி.எஸ்.பி., தினகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.