ADDED : செப் 19, 2024 11:18 PM
மயிலம்: கிளியனுாரில் இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர் சபாபதி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் சேகர் வரவேற்றார். துணைச் செயலாளர்கள் முருகன் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சவுரிராஜன், பொருளாளர் வீரப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், உப்புவேலுார், தைலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும். உப்புவேலுார் - எடச்சேரி சாலையை சீரமைக்க வேண்டும். 108 சேவை பணிக்காக தனி ஆம்புலன்ஸ் அமைக்கப்பட வேண்டும். நல்லாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.