ADDED : நவ 28, 2025 05:09 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த கலிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கலிஞ்சிககுப்பம் கிளை செயலாளர் பாவாடை தலைமை தாங்கினார். கற்பகம், தனஞ்செழியன், ரங்கநாதன், விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சவுரிராஜன், துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கலிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் கடந்த 2022 முதல் 2024 வரை 3 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தில் தென்பெண்ணையாற்றில் சுக்கன்குளம் வெட்டியதாகவும், தனியார் நிலத்தில் குளம் ஏற்படுத்தியதாகவும் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

