தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

 இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

 இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 16, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிச்சை, நகர செயலாளர் அகஸ்டின், துணைச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.

ஜாம் நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஏற்றுமதியை நிறுத்தி உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொதுமக்கள் தேவைக்காக உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்துவதை உறுதி செய்தல். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை இந்திய அரசு கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட நிர்வாகக்குழு இன்பஒளி, சகாபுதீன், ராமச்சந்திரன், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். இடை கமிட்டி செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறி னார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us