/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு தின விழா
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு தின விழா
ADDED : டிச 29, 2025 06:04 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ., அலுவலகத்தில், கட்சியின் நுாற்றாண்டு நிறைவு தின விழா நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மூத்த கட்சி நிர்வாகி மாமந்துார் ராமமூர்த்தி செங்கோடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, வழக்கறிஞர் முருகன், மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், செல்வம், வழக்கறிஞர் திலகவதி, பிச்சை, முருகன், ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அரசு, இளைஞர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் காத்தவராயன், நிர்வாகிகள் ஆறுமுகம், அதியமான், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

