/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ தொழிற்சங்க மாநில பொதுக்குழு
/
அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ தொழிற்சங்க மாநில பொதுக்குழு
அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ தொழிற்சங்க மாநில பொதுக்குழு
அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ தொழிற்சங்க மாநில பொதுக்குழு
ADDED : டிச 29, 2025 06:04 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக பாட்டாளி கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் தேவிபாலா அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, பாட்டாளி தொழிற் சங்க மாநில தலைவர் மேகநாதன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். ஆட்டோ தொழிற் சங்க தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ரவி, பா.ம.க., மாவட்ட தலைவர் சிவக்குமார் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, அமைப்பு செயலாளர் பழனிவேல், மாவட்ட தலைவர் தங்கஜோதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொழிற் சங்க மாநில பொருளாளர் சீனுவாசன், பொருளாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர்கள் தணிகைமலை, திருமலை, மாவட்ட துணைச் செயலாளர் குமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ தொழிற் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்ட வாடகை வாகன கட்டணங்களை விலை வாசி உயர்வுக்கு ஏற்ப திருத்தியமைக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு 55 வயது முதலும், ஆண் தொழிலாளர்களுக்கு 60 வயது நிறைந்தவுடன் மாத ஓய்வூதியம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

