/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் விழுப்புரம் மாவட்ட தி.மு.க., அறிவுரை
/
வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் விழுப்புரம் மாவட்ட தி.மு.க., அறிவுரை
வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் விழுப்புரம் மாவட்ட தி.மு.க., அறிவுரை
வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் விழுப்புரம் மாவட்ட தி.மு.க., அறிவுரை
ADDED : டிச 29, 2025 06:03 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்களில் கட்சியினர் பங்கேற்று, வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சிறப்பு முகாம் கடந்த 27 மற்றும் நேற்று 28ம் தேதியும் நடந்தது.
இதனையடுத்து வரும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதியும் அனைத்து ஓட்டுச்சாடி மையங்களிலும் திருத்தப் பணிகள் நடக்கிறது.
இதனால், விடுபட்ட நமது கட்சியின் ஆதரவு வாக்காளர்கள், ஓரணியில் தமிழ்நாடு குடும்ப வாக்காளர்கள் மற்றும் நமக்கு ஆதரவான 18 வயது பூர்த்தியடையக் கூடியவர்களை உடனடியாக படிவம் 6ஐ பூர்த்தி செய்து, இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் தகுதி இல்லாதவர்கள் இடம் பெற்றிருப்பின், அந்த ஓட்டுகளை நீக்குவதற்கான படிவம் 7ஐ பூர்த்தி செய்து அளித்தல் வேண்டும்.
நடைபெறும் முகாம்களில் ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெற உள்ள வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சிறப்பு முகாமில், கட்சியின் அனைத்து நிர்வாகிகள், பி.எல்.ஏ-2, பி.டி.ஏ., பி.எல்.சி., ஆகியோர் கலந்து கொண்டு, வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண் டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.,

