/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்திய மருத்துவ சங்கம் ஆலோசனை கூட்டம்
/
இந்திய மருத்துவ சங்கம் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 11, 2025 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் செஞ்சி கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஞ்சி அடுத்த ஊரணித்தாங்கல் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் செஞ்சி கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் பாபு, பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
சங்க உறுப்பினர்கள் சூரியபிரகாஷ், கலைமணி, சுப்பிரமணியன், பாலகோபால், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சங்க செயல்பாடு குறித்தும், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், மருத்துவ நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் குறித்தும் விவாதித்தனர்.