/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குஹானந்தர் சித்தர் பீடத்தில் சண்டி ஹோமம் துவக்கம்
/
குஹானந்தர் சித்தர் பீடத்தில் சண்டி ஹோமம் துவக்கம்
ADDED : அக் 02, 2024 11:45 PM

வானூர் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு லலிதா திரிபுரசுந்தரி குஹானந்தர் சித்தர் பீடத்தில் நவராத்திரி சண்டி ஹோமம் நேற்று துவங்கியது.
வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டு, வேதபுரீஸ்வரர் நகரில் லலிதா திரிபுரசுந்தரி குஹானந்தர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
இந்த சித்தர் பீடத்தில் நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை நவராத்திரி சண்டிஹோமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி நேற்று காலை 8;30 மணி முதல் பகல் 1;30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், கோ பூஜை, வேதிகார்ச்சனை, சப்தசதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து சண்டி ஹோமமும், உடன் அலங்கார தீபாரதனையும் நடந்தது.
தினமும் மாலை 6;00 மணிக்கு அம்மனுக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை தீபாரதனை நடக்கிறது. நேற்று நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் பீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.