
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி பேசினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சென்னை கிருஷ்ணசாமி பெண்கள் கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் சந்திரிகா எவ்வாறு படிக்க வேண்டும், எதிர்கால திட்டங்கள் குறித்து அறிவுரை வழங்கி பேசினார்.
கல்லுாரி துறை தலைவர்கள் சிவசுப்ரமணியம், வீரமுத்து, அருணகிரி, அனுராதா, முத்துலட்சுமி, வேதாசலம், வெங்கடேசன், உதவி பேராசிரியர்கள் சதீஷ், சுபஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.