/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
/
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 20, 2025 05:05 AM
விழுப்புரம்:' புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் செயல்பாடு குறித்து அனைத்து கல்லுாரி முதல்வர்கள், பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
அப்போது, இந்த திட்டங்களின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் பயனடையும் மாணவ, மாணவிகளின் விபரம் குறித்து துறை சார்ந்த அலுவர்களிடம் கேட்டறியப்பட்டது.
நிலுவையில் உள்ள ஆதார் இணைப்பு பற்றிய விபரங்கள், மேல்முறையீடு மீது நடவடிக்கை எடுத்த விபரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணோடு இணைத்துள்ளதை அனைத்து கல்லுாரி முதல்வர்கள், பொறுப்பு அலுவலர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து நிலுவையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.