/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் நுண்ணறிவு பயிலரங்கு
/
மகளிர் கல்லுாரியில் நுண்ணறிவு பயிலரங்கு
ADDED : அக் 11, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'தோல் பராமரிப்பு எதிர்காலம் - அழகு தொழில்நுட்பத்தில் புதுமைகள்' தலைப்பில் நுண்ணறிவு மற்றும் தகவல் தரும் பயிலரங்கம் நடந்தது.
ஆடை வடிவமைப்பு துறை சார்பில் நடந்த பயிலரங்கில், அஸ்வின் பேஷன் அகாடமி நிறுவனர் அஸ்வினி, 'தோல் பராமரிப்பு பொருட்கள், தொழில் நுட்பங்களில் விரைவான மாற்றங்கள்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பயிலரங்கில், தர அடையாளம் உள்ள பொருட்களை கண்டறியும் முறை, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், உயிரி தொழில்நுட்பம் பற்றி கூறினார். ஆடை வடிவமைப்பு துறை தலைவர் மரியா பெலிக்ஸ் வரவேற்றார். உதவி பேராசிரியர் விமல் நன்றி கூறினார்.