/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் எஸ்.பி.,தலைமையில் சோதனை
/
மாவட்டத்தில் எஸ்.பி.,தலைமையில் சோதனை
ADDED : நவ 11, 2025 11:35 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்.பி., சரவணன் தலைமையில், நள்ளிரவு முதல் அதிகாலை வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் குண்டு வெடித்து 13 பேர் இறந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நாடு முழுதும் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முன் எஸ்.பி., சரவணன் தலைமையில் இரவு 10:30 மணிக்கு தொடங்கி தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
பஸ் நிலையத்திற்கு வந்த புறநகர் பஸ்களிலும், பயணிகளின் உடமைகளையும் சோதித்து அனுப்பினர்.
தொடர்ந்து, விழுப்புரம், ஜானகிபுரம், முத்தாம்பாளையம் ஆகிய பைபாஸ் சந்திப்புகளில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி., தலைமையில் வாகன சோதனை நடந்தது.
இதே போல், திண்டிவனம், செஞ்சி, கண்டமங்கலம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளிலும், அதிகாலை வரை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

