தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விதை பரிசோதனைக்கு அறிவுறுத்தல்

விதை பரிசோதனைக்கு அறிவுறுத்தல்

விதை பரிசோதனைக்கு அறிவுறுத்தல்


UPDATED : நவ 19, 2026 07:47 PM

ADDED : நவ 19, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:47 PM ADDED : நவ 19, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கார்த்திகைபட்ட மணிலா சாகுபடியில் அதிக மகசூலை பெற, குறைந்த வயதுடைய தரமான உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சோபனா செய்திக்குறிப்பு;

கார்த்திகை மாதத்திற்குள் மணிலா விதைப்பு செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அளிக்கிறது. இந்த பட்டத்தில் சாகுபடி செய்யும்போது, போதிய மழை, சரியான தட்பவெப்பநிலை சாதகமாக இருப்பதால் அதிகமகசூல் பெறப்படுகிறது.

நல்ல தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். பயிரிடும் விதை தரமானதாக இருப்பது அவசியம் என்பதால் விதையின் தரத்தை பரிசோதிக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளை கொடுத்து அதன் தரத்தை அறிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக முதல் தளத்தில் செயல்படும் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலரை அணுகலாம். ஒரு மாதிரி பகுப்பாய்வு பரிசோதனைக் கட்டணமாக 80 ரூபாய் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us