தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்


ADDED : செப் 28, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதத்தை தவிர்க்க... பருவமழை மீட்பு பணிக்கு தயாராக இருக்க கலெக்டர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யவதில் கண்டிப்பாக காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்படி, வரும் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையின்போது முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி, வருவாய்த் துறையில், அனைத்து தாசில்தார்களும் பேரிடர் மீட்பு மையங்களை துாய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன் மீட்பாளர்களின் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நிவாரண முகாம்கள் அமைக்கப்படும் நேரங்களில் உணவு சமைத்தல், குடிநீர், குழந்தைகளுக்கு பால் விநியோகம் செய்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் கண்டிப்பாக காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.

காவல் துறையினர், தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகிய பிரிவினரை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

தீயணைப்புத் துறையினர், மரம் அறுக்கும் இயந்திரங்கள், லைப் ஜாக்கெட்டுகள், படகுகள் மற்றும் இதர உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடந்த வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து முன்கூட்டியே படகுகளை நிலை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் மரம் அறுப்பான்கள், நீர் இறைப்பான்கள், கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், ஜெனரேட்டர்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் வனத்துறையினர் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் விஷ பாம்புகளை பிடிக்க பாம்பு பிடிப்பவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர், விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள். வேளாண் பொறியியல் துறையினர் புல்டோசர்கள், டிராக்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்..

சுகாதாரத்துறையினர், அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அடிப்படை மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் மின்தடை ஏற்படாதவாறு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். பாம்பு கடி விஷ முறிவு மருந்துகள், பூச்சி கடி மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்

கால்நடை பராமரிப்புத் துறையினர், கால்நடைகளுக்கு தேவையான மருந்து, மாட்டுத் தீவனத்தின் இருப்பு, இறந்த விலங்குகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே இருப்பு வைக்க வேண்டும். மின்சாரத் துறையினர், ஜெனரேட்டர்கள், அவசர கால விளக்கு, ஏணிகள், ஹாலோஜன் விளக்குகள், லாரிகள், கிரேன்கள் ஆகியவற்றை தயார்நிலையில் வைக்க வேண்டும்.

தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கடத்திகள் ஆகியவைகளை கூடுதல் இருப்பு வைக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us