ADDED : அக் 11, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி தலைமை ஆசிரியர் மாலாராணி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் கமலா, மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திரன், சமூக பணியாளர் வாசுகி முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல ஆலோசகர் முருகன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை பற்றியும், குழந்தை திருமணம், தொழிலாளர் கடத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சைல்டு லைன் 1098 எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் காங்கேயன் நன்றி கூறனார்.