/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
விழுப்புரம் அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
விழுப்புரம் அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
விழுப்புரம் அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : மார் 16, 2025 11:24 PM

விழுப்புரம்; விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் வணிகம் மற்றும் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
வணிகவியல் துறை தலைவர் பாண்டியன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையுரையாற்றினார். கருத்தரங்க செயலர் கார்த்திகேயன் அறிமுக உரையாற்றினார்.
லண்டன் ரிஜண்ட் கல்லூரி தொழில் மேலாண்மை துறை தலைவர் ரிஷிராம்அறியால் மற் றும் கனடா மூத்த கொள்முதல் ஆய்வாளர் வைஷ்ணவி லோகநாதன் ஆகியோர், வணிகம் மற்றும் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து, இணைய வழியில் சிறப்புரையாற்றினார்.
தர்மபுரி அரசு கலை கல்லூரி பேராசிரியர் நடராஜன், பென்னாகரம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் கண்ணுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பேராசிரியிர் ருக்மணி நன்றி கூறினார்.

