/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநில மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு
/
த.வெ.க., மாநில மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு
த.வெ.க., மாநில மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு
த.வெ.க., மாநில மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு
ADDED : செப் 20, 2024 09:58 PM

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள த.வெ.க., முதல் மாநாட்டில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
த.வெ.க., முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு, விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் நடக்கிறது. இதனை கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
மாநாட்டில் கொள்கைகள் பற்றியும், இலக்குகள் குறித்தும் பேசப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் த.வெ.க., முதல் மாநாட்டை நடத்த மாநில பொது செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், இங்குள்ள நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த மாநாட்டை கட்சியின் அரசியல் வெற்றிக்கான அடையாளமாக மாற்றி காட்ட வேண்டும்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், நடிகர் விஜய் படங்களுக்கு காட்டிய வெற்றி ஆர்வத்தை விட, பல மடங்கு இந்த மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு தங்களின் செயல் திறனை காட்ட வேண்டும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் வருகை புரிந்து பங்கேற்க இருப்பதால் அவர்களை இங்குள்ள நிர்வாகிகள் ஒருங்கிணைத்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.