/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் மந்தம் அதிருப்தியில் மண்டல பொறுப்பு அமைச்சர் ஒன்றிய நிர்வாகிகள் பதவிக்கு ஆபத்து?

ADDED : ஆக 12, 2025 02:44 AM
வி ழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி, மஸ்தான் ஆகியோரது பதவி பறிப்பு காரணமாக மாவட்டத்தில் ஒரு அமைச்சர் கூட இல்லாத நிலை நீடித்து வந்தது.
கட்சியில் நிலவும் கோஷ்டி பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், கட்சி தலைமை கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை, மண்டல பொறுப்பாளராக நியமித்தது.
இதில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம் ஆகிய 3 தொகுதி களிலும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி, கட்சி நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது எழுந்த சரமாரியான புகார்களுக்கு டென்ஷனாகிய அமைச்சர், 'நிர்வாகிகள் தங்களை திருத்திக் கொள்ளவிட்டால், கட்சி தலைமை யிடம் புகார் கூறி நடவடிக்கை எடுப்பேன்' என எச்சரிக்கையும் விடுத்தார்.
இப்படி இருந்தும், ஒரணியில் தமிழ்நாடு, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி, பல ஒன்றியங்களில் 40 சதவீத உறுப்பினர் சேர்க்கையை கூட எட்ட முடியவில்லை.
கட்சியில் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய சேர்மன்கள், நகரமன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிகளில் பொறுப்பு வகித்தவர்கள் ஆளுங்கட்சி கோதாவில் பணம் பார்த்துவிட்டதால், உறுப்பினர் சேர்க்கையை முடித்து, அமைச்சரிடம் நல்ல பேர் வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
ஆனால் பன்னீர்செல்வம் அடிமட்ட தொண்டர்கள், கிளை செயலாளர்கள் மத்தியில் தனியாக விசாரணை நடத்தியதில், வடக்கு மாவட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மந்தமாக நடைபெறுவததற்கு, ஒன்றிய நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதை அறிந்து கொண்டார்.
வடக்கு மாவட்டத்தில் புகார்களுக்கு உள்ளான ஒன்றிய சேர்மன்கள், ஒன்றிய செயலாளர்களின் பதவி பறிப்பு நிச்சயம் நடக்கும் என கட்சியின்அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.