/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
ADDED : அக் 26, 2025 05:00 AM

மயிலம்: மயிலம் தாலுகாவில் துாய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் மணிமாறன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி சேதுநாதன் துவக்க உரையாற்றினர். மஸ்தான் எம்.எல்.ஏ., நலவாரிய அடையாள அட்டையை துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி பேசினார்.
துாய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் கண்ணன், தாட்கோ விழுப்புரம் மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தமிழக அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், நிவேதிதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், சேகர், நிர்வாகிகள் பிரபு, கார்த்தி, சங்கர், சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

