/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பதவிக்கு வருவது முக்கியமல்ல நன்மைகள் செய்வது அவசியம் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : ஆக 11, 2025 06:51 AM

விழுப்புரம் : 'பதவிக்கு வருவது முக்கியம் கிடையாது. அதன் மூலம் பிறருக்கு நன்மைகளை செய்ய வேண்டும்,' என லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசினார்.
விழுப்புரத்தில், ராயல்ஸ் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் அனைவரும், சிறப்பான சேவையாற்ற வேண்டும். பொதுவாக ஒரு பதவிக்கு வரும்போது மகிழ்ச்சி இருக்கும். அந்த பதவியை ஏற்றபின், சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் நெருக்கடிகளை சமாளித்து, திறமையாக செயல்பட வேண்டும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு, பதவிக்கு வருவது சாதாரணமாக தெரியலாம். அந்த பொறுப்புக்கு வருபவர்கள் பல்வேறு பிரச்னைகளை சமாளித்து, சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.
பதவிக்கு வருவது முக்கியம் கிடையாது. அதன் பிறகு அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு பணியாற்றுவ து டன், பொதுசேவையிலும் சாதித்து காண்பிக்க வேண்டும். கிடைத்த பதவி மூலம் நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மைகளை செய்ய வேண்டும்' என்றார்.