/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெ., பிறந்த நாள் விழா மெகா கிரிக்கெட் போட்டி
/
ஜெ., பிறந்த நாள் விழா மெகா கிரிக்கெட் போட்டி
ADDED : மே 17, 2025 11:32 PM

திண்டிவனம்: மயிலம் சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ., வின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த மெகா கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மயிலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மயிலம் கிழக்கு, மேற்கு, ஒலக்கூர்மேற்கு, வல்லம் வடக்கு, தெற்கு ஆகிய 5 ஒன்றியங்களை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெறும் மெகா கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
இப்போட்டிகள், தழுதாளி, செண்டியம்பாக்கம், ரெட்டணை, அகூர், நெய்குப்பி கூட்ரோடு, வல்லம், மேல்சித்தாமூர், கல்லடிக்குப்பம், இல்லோடு ஆகிய இடங்களில் துவங்கியது.
நெய்குப்பி கூட்ரோட்டில் நடந்த கிரிக்கெட் போட்டியை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மாவட்ட பொருாளர் வெங்கடசன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, புலியனுர் விஜயன், சேகரன், விநாயக மூர்த்தி, நடராஜன், பன்னீர், ராமதாஸ் மாவட்ட பொருாளாளர் வெங்கடசன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி, மயி லம் தொகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் வீராசம்பத், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலம் சட்டமன்ற தொகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்ட இப்போட்டி யில், முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.ஒரு லட்சமும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.75 ஆயிரமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 4ம் இடத்திற்கு ரூ.25 ஆயிரம், 5வது இடத்திற்கு ரூ.20 ஆயிரம், 6வது இடம் ரூ.15 ஆயிரம், 7 வது ரூ.10 ஆயிரம், 8வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.