ADDED : அக் 16, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை மாநில துணைத் தலைவர் சங்கரலிங்கம் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் சிவக்குமார், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தினகரன் நன்றி கூறினார்.