/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் ஜமாபந்தி துவங்கியது
/
திண்டிவனத்தில் ஜமாபந்தி துவங்கியது
ADDED : மே 22, 2025 11:57 PM

திண்டிவனம் : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது.
தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு துவங்கிய ஜமாபந்திக்கு தாசில்தார் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கி ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். மயிலம் குறுவட்டத்திலிருந்து 150க்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
முன்னாள் அமைச்சர் மஸ்தான், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர தி.மு.க.,. செயலாளர் கண்ணன், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் சங்கரலிங்கம், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கலா, தலைமையிடத்து துணை தாசில்தார் பச்சையம்மாள், மண்டல துணை தாசில்தார்கள் பாரதிராஜா, மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சு, தேர்தல் தனி தாசில்தார் விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.