/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் ஜமாபந்தி நிறைவு 202 மனுக்களுக்கு தீர்வு
/
வானுாரில் ஜமாபந்தி நிறைவு 202 மனுக்களுக்கு தீர்வு
ADDED : மே 28, 2025 11:50 PM

வானுார்: வானுார் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில், 202 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
வானுார் தாலுகா அலுவலகத்தில் இந்தாண்டிற்கான ஜமாபந்தி கடந்த 21ம் தேதி துவங்கியது. தாசில்தார் வித்யாதரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வந்தார். நேற்று வரை பொது மக்களிடம் இருந்து மொத்தம் 576 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், இலவச வீட்டு மனைப்பட்டா 25, முழுப்புலம் பட்டா மாற்றம் 60, திருமண உதவித்தொகை 11 என மொத்தம் 202 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. நேற்றைய ஜமாபந்தி நிறைவு விழாவில், தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு, பயனாளிகளிடம், தீர்வு காணப்பட்ட உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் வழங்கினார்.
தாசில்தார்கள் வசந்தகிருஷ்ணன், சரவணன், கலா, துணை தாசில்தார்கள் ராஜ்குமார், மண்டல துணை தாசில்தார் சார்லின், வட்ட வழங்கல் அலுவலர் ஷோபா லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.