/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளி பட்டமளிப்பு விழா
/
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 10, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., செகண்டரி பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின், நிர்வாக தலைவர்கள் வாலண்டினா லெஸ்லி, சுகன்யா ராபின் முன்னிலை வகித்தனர். முதல்வர் விஜயா வரவேற்றார்.
கோலியனுார், கரூர் வைசியா வங்கி கிளை மேலாளர் கார்த்திக் ராம்குமார் சிறப்புரையாற்றி, மழலையர் 2ம் நிலை மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு செல்வதற்கான பட்டம் சூட்டி, பரிசளித்தார்.
தொடர்ந்து மழலையர்களின் நாடகம் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

