/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வுகளில் 'சென்டம்'
/
ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வுகளில் 'சென்டம்'
ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வுகளில் 'சென்டம்'
ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வுகளில் 'சென்டம்'
ADDED : மே 18, 2025 09:15 PM

திண்டிவனம் : ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
திண்டிவனம் ஜெயபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் 20 மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில் 18 பேர்களும், 10 ஆம் வகுப்பில் 20 பேர்களும் பொதுத்தேர்வு எழுத்தினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதின் மூலம் பள்ளி பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை தினகரன் கல்வி சங்க தலைவர் தினகரன், ஸ்ரீ தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விஷ்ணு மகேஷ்வரன், பள்ளி செயலாளர் ஜோதி தினகரன், பள்ளி இணைச் செயலாளர் இளந்தென்றல் விஷ்ணு மகேஷ்வரன், பள்ளி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இப்பள்ளி தொடர்ந்து 40 ஆண்டுகளாக அரசு பொதுத்தேர்வில், நுாறு சதவீத சாதனை பெற்று வருவதாக, பள்ளியின் தாளாளர் தெரிவித்தார்.