/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு
/
பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு
ADDED : செப் 10, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: பஸ்சில் தம்பதியிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி தாலுகா கொய்யாதோப்பை சேர்ந்தவர் விஜயகுமார், 34; இவர் கடந்த ஆக.,30 ம் தேதி மனைவி ராசாத்தியுடன் தனியார் பஸ்சில் வேட்டவலம் சென்றார்.
அங்கு சென்று அவர் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த, 10 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து அவர் கெடார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.