/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
/
சூர்யா பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 02, 2026 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார். புதுச்சேரி லுாகாஸ் டி.வி.எஸ், மதர்ஸன் பிரைவேட் லிமிடெட் கம்பெனியைச் சேர்ந்த மனித வள மேலாளர்கள் அருண்குமார், கண்ணன் ஆகியோர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி 66 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினார். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பேராசியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரண்குமார் நன்றி கூறினார்.

