/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் வருகை ஆலோசனைக் கூட்டம்
/
முதல்வர் வருகை ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 02, 2026 04:15 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்களுடன் முதல்வர் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வரும் 4ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். விழாவில், பயனாளிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தி நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். மேலாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயனாளிகளுக்கு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலாளர் அபிராமி நன்றி கூறினார்.

