/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
/
சூர்யா பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 16, 2026 06:45 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மோகன் வரவேற்றார்.
சென்னை நோக்கியா நெட் ஒர்க் சொல்யூஷன் நிறுவனம் சார்பில் புளூ ஓஷன் அமைப்பின் மனித வள மேலாளர் தேஜா கல்லுாரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி 64 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினார்.
தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பேராசியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரண்குமார் நன்றி கூறினார்.

