/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டோல்கேட் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
டோல்கேட் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 16, 2026 06:45 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல்கேட் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
விக்கிரவாண்டி, உளுந்துாார் பேட்டை எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் டோல்கேட்டில் நகாய் மற்றும் ஹெச்.எல்.எல்., நிறுவனம் சார்பில் நடந்த பயிற்சிக்கு திட்ட மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., தண்டபாணி வரவேற்றார்.
ஹெச்.எல்.எல்., நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் கீதா, இந்துமதி ஆகியோர் டோல்கேட் ஊழியர்களுக்கு சாலையில் விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது, மாரடைப்பில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது., தன் சுத்தம் மற்றும் சீர் படுத்துதல் மேலாண்மை தொடர்பியல், உடல்மொழி, சுங்கச்சாவடி விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்தனர்.
பயிற்சியில், பாதுகாப்பு மேலாளர்கள் அசோக்குமார், மனோஜ் குமார், துரை நாராயணன் உட்பட டோல்கேட் ஊழியர்கள் பங்கேற்றனர்.

